இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சீனாவிற்கு எதிரான வரிகள் 125% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா நேற்று (9) முதல் 104% வரி விதித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீன நிதி அமைச்சகம் இன்று பிற்பகல் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரி விதிக்கப்போவதாக அறிவித்தது.
அதன்படி, சீனாவின் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா மீண்டும் ஒருமுறை வரி விகிதத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.