ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (10) விசேட அறிவிப்பை வெளியிட்டது.
அந்த அறிவிப்பில், அந்த நாட்களில் மதியம் 12.00 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒருநாள் சேவைக்காக செயல்பட்டு வந்த 24 மணி நேர சேவை மேற்கூறிய நாட்களில் இயங்காது என்று அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.