வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய – கொட்டா வீதி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ராஜகிரிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பத்தரமுல்லவில் இருந்து பொரளை நோக்கி பயணித்த லொறியொன்று பாதசாரி கடவையில் சென்ற பெண் மீதி மோதியுள்ளது.
பின்னர், சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 59 வயதுடைய ராஜகிரிய, ஒபேசேகரபுர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே மரணித்துள்ளார்.
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதோடு, சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் வெலிக்கடை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.