வவுனியா – ஓமந்தை மத்திய கல்லுாரி ஆசிரியர் தயாபரன் விபத்தில் சிக்கி உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா – ஓமந்தை மத்திய கல்லூரியின் தமிழ்ப் பாட ஆசிரியர் தயாபரன் அவர்கள் கடந்த 04.04.2025 அன்று ஏற்பட்ட வீதி விபத்தில் படுகாயமுற்று யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் சிகிற்சை பலனின்றி நேற்று முன்தினம் (09.04.2025) இரவு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களையும் பாடசாலை சமுகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.