கட்டுநாயக்காவிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் வந்த கயஸ் வேன், புத்தளம் – அனுராதபுரம் வீதியில் ராஜாங்கனை பண்ணை சந்திக்கு அருகில், நேற்று (10) மதியம் விபத்துக்குள்ளாகி உள்ளது.
சாரதி தூக்கத்தில் இருந்ததால், கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி யானை வேலி மற்றும் வாழைத் தோட்டத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
உயிர் சேதங்கள் ஒன்றும் ஏற்படவில்லை.