டுபாயில் இருந்து கட்டுநாயக்க வந்த விமானத்தில், பெண் பயணி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (12) காலை டுபாயில் இருந்து வந்த பிட்ஸ் ஏர் விமானத்தில் ஏ.டி. 822 விமானத்தின் மூலம் வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர் விமானத்தில் அந்தப் பெண்ணைத் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இது குறித்து விமானக் குழுவினருக்குத் தெரிவிக்க குறித்த பெண் நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் இந்திய பிரஜை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.