நாளை அதிகாலை 5 மணியளவில் வானில் ‘இளஞ்சிவப்பு நிலவு’ (PINK MOON) தோன்றவுள்ளது. இதை வெறும் கண்களால் காண முடியும்.
இந்த ஆண்டின் மிகச்சிறிய முழு நிலவாக இது இருக்கும். ஏனெனில் சந்திரன் பூமியிலிருந்து அதன் மிகத் தொலைவான புள்ளியான அபோஜியில் இருக்கும்.
எனவே இதை MICRO MOON என்றும் அழைக்கின்றனர்.
வசந்த காலத்தில் வரும் முதல் முழு நிலவு என்பதால் பிங்க் நிலா எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் இது பிங்க் நிறத்தில் காட்சியளிக்காது.
வட அமெரிக்காவில் வசந்த காலத்தில் பூக்கும் காட்டுப்பூவான ஃப்ளோக்ஸ் சுபுலாட்டா பூ “மோஸ் பிங்க்” என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பூக்கள் வசந்தத்தின் துவக்கத்தைக் குறிக்கின்றன. இதன் பின்னணியிலேயே PINK MOON என்று பெயர் வந்தது.