குருணாகல் – புத்தளம் வீதியில் லக்மல் உயன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது.
குருணாகலில் இருந்து வாரியப்பொல நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
21 வயதுயைட இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.C