யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் மரணமடைந்தார்.
குறித்த சம்பவம் சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.
கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று மிக மெதுவாக சென்றுகொண்டிருந்த போது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் மரணமடைந்தார்.
சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், டிப்பர் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்