அதிவேக வீதியில் 3 நாட்களில் 13 கோடி ரூபாய் வருவாய்.!

0
24

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, அதிவேக வீதியில் கடந்த 3 நாட்களில் 134 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மட்டும் 387,000 வாகனங்கள் அதிவேக வீதியில் இயக்கப்பட்டதாக அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. டி. கஹடபிடிய தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம், இந்த வீதியில் 10 கோடியே 23 இலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த வருவாய் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அதிவேக வீதியில் பயணித்த 297,736 வாகனங்களிலிருந்து ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here