“ஒரு வளமான நாடு மற்றும் ஒரு அழகான வாழ்க்கையை” நோக்கமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) எதிர்காலத்தில் ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் முசலி தேர்தல் பிரிவில் உள்ள சிலாவத்துறை பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் நேற்று (12) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதை மேற்பார்வையிட அமைச்சரவை ஏற்கனவே ஒரு குழுவை நியமித்துள்ளதாகவும், அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
எந்தவொரு சூழ்நிலையிலும் மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் மக்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாக மாட்டார்கள் என்றும், அரசாங்கம் ஒருபோதும் இனவெறி மனப்பான்மையுடன் எந்தவொரு நெருக்கடியையும் அணுகாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.