மட்டக்களப்பில் புத்தாண்டு கொண்டாடிய இளம் குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழப்பு.!

0
68

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமத்தில், தமிழ் புத்தாண்டு தினமான இன்று (14) அதிகாலை, காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை 1 மணியளவில், வீட்டு முற்றத்தில் நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடி விளையாடிக் கொண்டிருந்த 31 வயதுடைய இராசதுரை சசிகரன் என்பவர், சத்தம் கேட்டு வீட்டு வாசலுக்கு வந்தபோது, எதிர்பாராதவிதமாக யானையின் தாக்குதலுக்கு உள்ளானார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

தாக்குதலில் படுகாயமடைந்த சசிகரனை, உறவினர்கள் உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை 4:30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

சசிகரனின் உடல், உடற்கூறு பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற இந்த மரணச் சம்பவத்தால், 37ஆம் கிராமப் பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here