45 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 3 பேர் கைது.!

0
30

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் இன்று (14) காலை குஷ் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருட்களுடன் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று பயணிகளும் பேங்கொக்கிலிருந்து நாட்டிற்கு வந்துள்ள நிலையில், சந்தேக நபர்கள் சுங்க வளாகத்தை கடந்து செல்ல முயன்றபோது அவர்களை நிறுத்தி சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவர்களின் பயணப்பொதியினுள் பிஸ்கட் மற்றும் சிப்ஸ் பைகளில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில், சுங்க அதிகாரிகள் 1,616 கிராம் குஷ் மற்றும் 1,762 கிராம் ஹஷிஷை பறிமுதல் செய்துள்ளனர், மேலும் இந்த போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 45 மில்லியன் ரூபாய் என சுங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சந்தேக நபர்களில் இருவர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றவர் பதுளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் மற்றும் போதைப்பொருள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, மேலும் சந்தேக நபர்களையும் போதைப்பொருட்களையும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here