கிளிநொச்சியில் கடந்த வாரம் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் தாக்கிய சம்பவம் இடம்பெற்றது
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைக்கு அழைத்துள்ளது.
கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான இளைஞனை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காரணமின்றி தன்னை தாக்கி கைவிலங்கிட்டதாக குறித்த இளைஞன் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வருகின்ற 21 ஆம் திகதி மனித உரிமைகளை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஆகியோரை விசாரணைக்கு வருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பானை விடுத்துள்ளதாக
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார்.