யானையுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றுமோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதி, கன்னியா பகுதியில் நேற்றிரவு (14) இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய முபாரக் நிப்றாஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து வவுனியா திரும்பும் போது மோட்டார் சைக்கிள் யானையுடன் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.
உயிரிழந்தவரின் சக நண்பரான 22 வயதான வயதான இளைஞன் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் யானையுடன் மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் உயிரிழந்த இளைஞனின் சடலம் திருகோணமலை பொது வைத்தசாலை வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுள்ளது.
மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.