சுமார் 230 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் அமெரிக்க பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (15) கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டபோது 23 கிலோ கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர் தாய்லாந்தில் இருந்து குஷ் போதைப்பொருளுடன் இலங்கைக்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
31 வயதான அமெரிக்க பிரஜை, அமெரிக்காவில் காணி விற்பனை நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க பிரஜை கொண்டு வந்த சூட்கேஸில் 1 கிலோ கிராம் எடை கொண்ட 23 பெக்கெட்டுகளில் குஷ் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.