யாழில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் கல்வியங்காட்டில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
புத்தாண்டு தினமான நேற்றையதினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் குறித்த நபர் ஏறியுள்ளார்.
இதன்போது தென்னையில் கட்டப்பட்டிருந்த பொச்சு மட்டை கழன்று விழுந்தமையால் நிலை தடுமாறி தென்னையில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்து படுகாயமடைந்தவரை உடனடியாக மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.