அநுராதபுரம் – ஹபரணை பிரதேசத்தில் இடம்பெற்ற வேன் விபத்தில் சாரதியும் சிறுவர்களும் காயமடைந்துள்ளதாக ஹபரனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கிண்ணியா நோக்கிப் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது வேனில் பயணித்த சாரதியும் 2 சிறுவர்களும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.