கெலியோயாவில் உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் ரூ. 200,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதி நீதிமன்ற நீதிபதி இன்று காலை தனது அலுவலகத்தில் இருந்தபோது இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
தொழிலதிபரின் மகன் தொடர்பான விவாகரத்து வழக்கின் தீர்ப்பை விரைவுபடுத்துவதற்காக காதி நீதிமன்ற நீதிபதி லஞ்சம் கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.