உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடந்து இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு.!

0
24

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 3 தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரதான விருந்தகங்கள் என்பவற்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகிறது.

உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று காலை 7 மணிக்கு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் இருந்து பிரார்த்தனை ஊர்வலம் தொடங்கி, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை சென்றடையும்.

காலை 8:30 க்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் விசேட நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 8:45 க்கு, அனைத்து மத ஸ்தலங்களிலும் மணிகள் ஒலிக்கப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.