நேற்றைய தினம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது அவரிடமிருந்து 1010 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் திரு.மயூரன் தலைமையிலான போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேக நபர் தற்போது சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.