கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
இதன்போது யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதி பகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
குறித்த நபர் கனடா செல்வதற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தார். இருப்பினும் நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதிக்கு அருகில் உள்ள காணியில், மரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.