அநுராதபுரம், எலயாபத்துவ, ஹல்மில்லவெவ பகுதியிலுள்ள குளம் ஒன்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், கல்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலமானது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எலயாபத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.