குருணாகல் – எஹட்டுவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கத்துருவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹட்டுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் எஹட்டுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.
இவர் இன்றைய தினம் அதிகாலை தனது வீட்டுத் தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்ற போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் குருணாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக எஹட்டுவெவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.