திருகோணமலையில் நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு..! Video

0
14

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்துக்கு அருகில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை மாலை 5:15 மணி அளவில் குறிஞ்சாக்கேணி பாலத்துக்கு அருகில் இடம் பெற்ற இச்சம்பவத்தில் முகமது ரியாஸ் ரம்மி (வயது-10) எனும் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

நண்பர்கள் மூவருடன் மட்டி எடுக்கச் சென்ற வேளையில் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் கிண்ணியா மத்திய கல்லூரியில் தரம் ஐந்தில் கல்வி கற்று வருகின்றார்.

சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.