கிளிநொச்சியில் 20 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இந்தக் கைது நடைபெற்றுள்ளது.
இன்று அதிகாலை வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கேரளா கஞ்சாவை, விசேட அதிரடிப் படையினரும் தர்மபுரம் பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தில், வீட்டின் உரிமையாளரான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நாளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.