பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 27 பேர் சிறு காயங்களுடன் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை கொமுனுபுரவில் இருந்து மஹியங்கனை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று, மாப்பாகட வராவ பகுதியில் (தடை) பிரேக் செயலிழந்தமையினால் மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட 27 பேர் சிறு காயங்களுடன் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.