யாழில் மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் எடுத்த முடிவு.!

0
42

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

22 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து நேற்றையதினம் தனது உயிரினை மாய்த்துக் கொண்டுள்ளார்.

அவருடைய சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இறப்புக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.

அவரது சகோதரி ஒருவரும் அதே மகளிர் இல்லத்திலேயே தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.