இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா அந்த பகுதிகளில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
அப்போது பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை அடைந்ததும், துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி கொல்லப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 22 ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளைக் கண்டுபிடிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உயர்மட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று இரவு, அனந்த்நாக் மற்றும் அவந்திபோராவில் நடந்த IED குண்டுவெடிப்பில், உள்ளூர் பயங்கரவாதிகளான அடில் தோகர் மற்றும் ஆசிப் ஷேக் இருவரின் வீடுகள் அழிக்கப்பட்டன. இவர்கள் இருவரும் ஏப்ரல் 22 ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பைசரனில் நடந்த கொடிய தாக்குதலில் தொடர்புடையவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. (Video-fb)
வீடியோ இந்த லிங்க் இல் இணைக்கப்படுள்ளது – https://web.facebook.com/share/v/15UUCpEwWs/
வீடியோ 2 இந்த லிங்க் இல் இணைக்கப்படுள்ளது – https://web.facebook.com/share/v/16L6ZuSPGt/