கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (25) பட்டிபொல பொலிஸ் பிரிவின் அம்பேவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.