மின்சார வேலியில் சிக்கி முதியவர் உயிரிழப்பு..!

0
24

நுவரெலியா கந்தபளை புதிய வீதி பகுதியில் மரக்கறி தோட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது. கந்தபளை புதிய வீதி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.

காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே முதியவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தன்று முதியவர் வழமைபோன்று தனது வீட்டிலிருந்து தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

தோட்டத்திற்கு சென்ற முதியவர் மீண்டும் வராததால் அவரது உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது தோட்டத்தில் முதியவர் சடலமாகக் கிடப்பதை அவதானித்த உறவினர்கள், இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலமானது பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தபளை பொலிஸாம் நுவரெலியா தடயவியல் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.