வவுனியாவில் மோட்டார் சைக்கிள் – பாரவூர்தியுடன் மோதி விபத்து.. பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு.!

0
21

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பாரவூர்தி ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் லக்ஸ்மன் பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது மரணம் தொடர்பான விசாரணையினை வவுனியா பொலிசார் மற்றும் திடீர்மரண விசாரணை அதிகாரி க.ஹரிபிரசாத் ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.