மட்டக்களப்பு மண்ணில் தொடரும் சாதனைகள்-
சனிக்கிழமை (26.04.2025) மாலை வெளியான 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சை கலைப்பிரிவில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
குணராஜா அபிசா என்ற மாணவி அளவையியல், மனைப் பொருளியல் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் 3A சித்திகளை பெற்றுள்ளார்.
குறித்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. நாமும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.
அத்துடன் வர்த்தக பிரிவில் காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை மாணவியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதேநேரம் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் 12 மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.