யாழ் மாவட்டத்தில் கணிதத்துறையில் முதலிடம் பெற்ற மாணவன்..!

0
50

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகி இருந்தன.

அந்தவகையில் கணிதத்துறையில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

குறித்த பாடசாலையின் மாணவனான கந்ததாசன் தசரத் என்பவரே இவ்வாறு கணிதத் துறையில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியாக இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.