கனடாவின் – வான்கூவர் பகுதியில் நடந்த தெரு விழா ஒன்றின் மக்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று வேகமாக வந்து மோதுண்டதில் 9 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரை ஓட்டி வந்த சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் அதே பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய நபர் என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், சந்தேக நபரின் அடையாளம் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த கொடூரமான நிகழ்வுகளைப் பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்ததாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி பதிவொன்று இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.