யாழில் முச்சக்கரவண்டி மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!

0
35

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலை வீதி பகுதியைச் சேர்ந்த அன்ரனி தேவதாஸ் (வயது-60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 24ஆம் திகதி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார். இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் அவர்மீது முச்சக்கர வண்டி மோதியது. பின்னர் அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் 25ஆம் திகதி அதிகாலை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. ஆகையால் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.