இலங்கையில் நடந்த சோகம்.. ‘லிஃப்ட்’ இடிந்து விழுந்ததில் இளைஞன் உயிரிழப்பு..!

0
47

காலி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் உள்ள மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.

குறித்த கட்டடத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரியும் அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று, இந்த இளைஞன் குறித்த கட்டடத்தின் கீழ் மாடியிலிருந்து இரண்டாவது மாடிக்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக மின்தூக்கியில் சென்றுள்ளார்.

இதன்போது, மூன்றாவது மாடியில் இருந்த மின்தூக்கி திடீரென இளைஞனின் மேல் உடைந்து விழுந்துள்ளது.

காயமடைந்த இளைஞன் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.