அதிவேகத்தால் 18 வயது இளைஞன் மரணம்.. தமிழர் பகுதியில் துயரம்.!

0
175

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் குருக்கள் மடத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதில் உயிரிழந்தவர் களுவதாளைக் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய திவாகரன் ஹபிசாயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிரான்குளம் பகுதியிலிருந்து இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் களுதாவளை நோக்கிச் சென்றுள்ளனர்

வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள் மடம் வளைவு பகுதியில் எதிரே இருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளது.

இதில் பயணித்த ஒருவர் ஸ்த்லத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here