முல்லைத்தீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற 3 பேரை காணவில்லை.!

0
204

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இருந்து (04) கடற்தொழிலுக்கு சென்ற படகு ஒன்றும் அதில் பயணித்த மூன்று கடற்றொழிலாளர்களும் கரை திரும்பாத நிலையில் உறவினர்களினால் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த (4) நண்பகல் புதுமாத்தளன் கடற்கரையில் இருந்து கடற்தொழில் நடவடிக்கைக்காக மூவர் சென்றுள்ளனர்.

இதன்போது, உடையார் கட்டு வெள்ளப்பள்ளத்தினை சேர்ந்த 35 அகவையுடைய குடும்பஸ்தர் மற்றும் திருகோணமலையினை சேர்ந்த குடும்பஸ்தர், மன்னாரினை சேர்ந்த ஒருவரும் சென்றுள்ளனர்.

இவர்கள் (5) மாலை வரை கரை திரும்பாத நிலையில் அவர்களை காணவில்லை என புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டினை புதுக்குடியிருப்பு வெள்ளப்பள்ளம் உடையார் கட்டு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற 35 அகவையுடைய குடும்பஸ்தரின் மனைவி மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் சங்க தலைவரிடம் கேட்டபோது படகு ஒன்றில் தொழிலுக்கு சென்றவர்கள் கரை திரும்பாத நிலையில் ஏனைய கடற்தொழிலாளர்களின் இரண்டு படகுகள் சென்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், கடற்தொழில் சங்கம் மற்றும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம், கடற்படையினர், ஆகியோருக்கு இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் அவர்களை தேடும் நடவடிக்கையில் ஏனைய கடற்தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here