சீரற்ற வானிலையால் 32 உயிர் உயிரிழப்பு.. 2 லட்சம் பேர் பாதிப்பு.!

0
186

இலங்கையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

மோசமான வானிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஒருவரைக் காணவில்லை எனவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேலும் 1,973 பாதுகாப்பான இடங்களில் 7,639 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக 63,413 குடும்பங்களைச் சேர்ந்த 239,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here