ஒக்டோபர் முதல் தொழில்துறை மற்றும் கனரக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் மற்றும் கனரக வாகனங்கள் இறக்குமதியுடன் இரண்டாம் கட்டத்தின் கீழ் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டில் சொகுசு மற்றும் அதி சொகுசு வாகனங்கள் இறக்குமதி தொடங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எனினும் வாகன இறக்குமதியில் மின்சார கார்களுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அண்மையில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.