முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது பதின் அகவை மகளின் மார்பினை தனது கையடக்க தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் இளம் தாயார் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இந்த சம்பவம் 12.06.2024 அன்று இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பாரதி வீதி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 32 அகவையுடைய இரண்டு பதின்ம வயது பெண் பிள்ளைகளை கொண்ட தயாரோ இந்த சம்பவத்தின் போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கணவனை பிரிந்த நிலையில் வாழ்ந்து வரும் நிலையில் தனது 13 அகவை சிறமி வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை சிறுமியின் மார்பக பகுதியினை தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார், இதனை தங்கையான 10 வயது சிறுமி கண்டு தனது சித்திக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து 32 அகவையுடைய குறித்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏன் தாயார் படமெடுத்தார்..? யாருக்கும் அனுப்ப எடுத்திருப்பாரா என்ற கோணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள்.
சிறுவர்களுக்க எதிரான வன்முறையினை தடுப்போம், சிறுவர்கள் மத்தியில் போதிய விழிப்பினை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை உங்கள் பிரதேசங்களில் இவ்வாறன பெற்றோர்கள் அல்லது தவறாக வழிநடத்தப்படும் சிறுவர்கள் தொடர்பில் அருகில் உள்ள பிரதேச செயலகங்களிலோ அல்லது பொலீஸ் நிலையங்களிலோ முறையிடலாம், முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்னும் கிராமங்களில் உள்ள மக்கள் மத்தியில் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் போதைவஸ்து ஒழிப்பு போன்ற விடையங்களை முன்னெடுக்கவேண்டும் என்பது எமது வேண்டுகோள்