மன்னாரில் துயரம்.. தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 8 வயது மகள் உயிரிழப்பு..!

0
99

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் (13) இரவு 7 மணியளவில் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் – முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயி தனது வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்தார்.

இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8 வயதுடைய மகள் திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here