கலஹா, நாரங்கின்ன பிரதேசத்தில் தலையில் தேங்காய் விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இவ்வாறு துரதிஷ்டவசமாக 11 மாத பெண் குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை குழந்தையை பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டு, திரும்பி வரும் போது வீட்டின் முன் இருந்த தென்னை மரத்தின் தேங்காய் குழந்தையின் தலையில் விழுந்து இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்த குழந்தை தெல்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.
அதன் பின்னர் குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.