கார் விபத்தில் தாய் உயிரிழப்பு.. தந்தை, மகள் படுகாயம்..!

0
91

குருணாகல் வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருணாகல் – புத்தளம் வீதியில், மஹகெலிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாய் உயிரிழந்த நிலையில் தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று காலை இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. புத்தளத்தில் இருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த சிறிய ரக லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் பயணித்த கார் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இதனால், காரில் பயணித்த தாய், தந்தை மற்றும் மகள் காயமடைந்த நிலையில் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் தாயார் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் மாஸ்பொத்த பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான தாயார் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் லொறியின் சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here