இரு பெண் கடற்படையினருக்கு ஆ.பா.ச காணொளிகளை அனுப்பிய முன்னாள் கடற்படை அதிகாரி கைது.!

0
117

இரு பெண் கடற்படையினருக்கு வட்ஸ்அப் மூலம் ஆபாச காணொளிகளை அனுப்பியதாகக் கூறப்படும் முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் கணினி குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இனந்தெரியாத நபரொருவர் தனது கையடக்கத் தொலைபேசியின் வட்ஸ்அப் இலக்கத்துக்கு ஆபாச காணொளிகளை அனுப்பி தன்னைப் பாலியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு அழைப்பதாகப் பெண் கடற்படையினர் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு முறைப்பாடு அளித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியின் வட்ஸ்அப் இலக்கத்துக்கு ஆபாச காணொளிகளை அனுப்பி தன்னைப் பாலியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு அழைப்பதாக மற்றுமொரு பெண் கடற்படையினரிடமிருந்தும் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த இரண்டு முறைப்பாடுகளுடனும் தொடர்புடையவர் ஒரே நபர் என தெரியவந்ததையடுத்து, சந்தேக நபர் பலப்பிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான முன்னாள் கடற்படை அதிகாரி பயன்படுத்தியதாகக் கூறப்படும் கையடக்கத் தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here