காதலியின் நி.ர்.வா.ண புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த இளைஞன் கைது.!

0
121

காதலியின் நிர்வாண புகைப்படத்தை வட்ஸ் அப்பில் பகிர்ந்து அச்சுறுத்தியதாகக் கூறப்படும் முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ சிப்பாயொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பெண் ஒருவருடன் நீண்ட காலமாகக் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில் இந்த பெண் சந்தேக நபருடனான காதல் உறவை முறித்துக் கொள்வதற்குத் தீர்மானித்துள்ளார்.

இதனை அறிந்துகொண்ட சந்தேக நபர் காதலியின் நிர்வாண புகைப்படங்களை வட்ஸ்அப் மூலம் காதலியின் நெருங்கிய நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட காதலி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (20) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here