அவுஸ்ரேலியாவில் வாழும் தம்பதியினர் யாழ்.தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்ல பிள்ளைகளுக்காக சுமார் 40 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை தானமாக வழங்கிய சம்பவம் பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்ரேலியாவில் வசிக்கும் வைத்தியர் மனோ மோகன் மற்றும் அவருடைய துணைவியார் கெளரி மனோ மோகன் ஆகியோரே இவ்வாறு தம்முடைய 40 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை தானமாக வழங்கியுள்ளனர்.
தாம் அளித்த தங்கத்தை, பிள்ளைகள் வளர்ந்து தமக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்போது பகிர்ந்தளிக்குமாறு கேட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த தம்பதிகளின் மனம் நிறைந்த நற்பணிக்காக தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் நன்றி பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் ஆதரவற்ற குழந்தைகளின் எதிகாலத்திற்காக குறித்த தம்பதியினர் தங்க நகைகளை வழங்கியுள்ளமை பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.