அநுராதபுரம், கல்கிரியாகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (25) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
பசிந்து காஞ்சன பண்டார என்ற 17 வயதுடைய இளைஞன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.