கொழும்பில் 67வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த 15 வயது மாணவனும் மாணவியும் தொடர்பில் வெளியான தகவல்.!

0
152

கொம்பனித்தெருவில் ஒல்டேயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து நேற்றிரவு (02) கீழே விழுந்து 15 வயதுடைய சிறுமியும் சிறுவனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தற்போது சிசிடிவி காட்சிகள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இருவரும் கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ம் வகுப்பில் பயின்று வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

பொலிஸ் விசாரணையில் இருவருக்கும் இடையே காதல் உறவு இருந்ததும் தெரியவந்துள்ளது. நேற்று பாடசாலை முடிந்ததும், சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள உடற்பயிற்சி மையத்துக்கு இருவரும் சென்றுள்ளனர்.

அங்கு உடைகளை மாற்றிக்கொண்டு, காலணிகளை கழற்றி பைகளையும் அங்கு வைத்துவிட்டு, உடற்கட்டமைப்பு மையத்துக்கு வெளியே உள்ள படிக்கட்டுகள் வழியாக 67வது மாடிக்கு சென்றுள்ளனர்.

பின்னர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 70 மாடிகளைக் கொண்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 03வது மாடியில் உள்ள குளிரூட்டும் பகுதியில் இவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அங்கு பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் மீது அவர்களின் உடல்கள் மோதி பலத்த காயம் ஏற்படிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த மாணவன் வெள்ளவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகவும், மாணவி களனி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here